DEPARTMENT OF TAMIL
தமிழ்த்துறை
1986-இல் கல்லூரி தொடங்கியபோதே, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பகுதி–1 தமிழைக் கற்பிக்கும் முகமாக தமிழ்த்துறையும் மலர்ந்தது.
பல்கலைக்கழக மானியக்குழு (UGC) நடத்தும் தகுதித் தேர்வில் (NET) தேர்ச்சி பெற்ற தகுதியான இணைப் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களுடன் தமிழ்த்துறை இன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மூவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். திருமதி ஆ. உஷா அவர்கள் முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வை எதிர்நோக்கிய நிலையில் உள்ளார். மாணவர்கள் பலர் பல்கலைக்கழகத் தேர்வு மதிப்பெண் தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
துறையின் சார்பில் நடத்தப்படும் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டங்களில் துறை சார்ந்த பல்வேறு அறிஞர்கள் பெருமக்கள் பேருரையாற்றி சிறப்பித்துள்ளனர். வருடந்தோறும் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் வருகைப் பேராசிரியர்கள் வந்து உரையாற்றுகின்றனர். பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு துறையின் சார்பில் இலக்கியப் போட்டிகள், வினாடி வினா போட்டிகள், நாடகம், பாரதி பாடல் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் மாநில அளவிலான திருக்குறள் எழுத்துத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, வாழ்வியல் நூலான திருக்குறளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை நமது மாணவர்கள் பெற்றுள்ளனர். மாநில மற்றும் பல்கலைக்கழக அளவிலான பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளனர்.
2012-ஆம் ஆண்டு விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு 150-வது ஆண்டு விழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பல்கலைக்கழக அளவிலான கட்டுரை, பேச்சு, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
2015-ஆம் ஆண்டு மாணவர்களின் கவிதைத் திறமையை வெளிப்படுத்த புதியகவிதைப் பாணியில் “கம்பன் கவியரங்கம்” நடத்தப்பட்டது.
2011 முதல் 2016 வரை “சுற்றுலாவியல்” சான்றிதழ் வகுப்பு நடத்தப்பட்டது. 2017 முதல் “படைப்புக்கலை” மற்றும் “நாட்டுப்புறவியல் – ஓர் அறிமுகம்” சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பகுதி–1-இல் சமஸ்கிருதம் பயிலும் தமிழ் அறியாத மாணவர்களுக்கு துறையசாரா விருப்பப்பாடமாக அறிமுகத் தமிழ் வகுப்பும், தமிழ் அறிந்த மாணவர்களுக்கு சிறப்புத்தமிழ் மற்றும் வளர்தமிழ் வகுப்புகளும் தமிழ்த்துறையின் மூலம் நடத்தப்படுகின்றன.
2017–2018 கல்வியாண்டில் கணிதவியல் மாணவி செல்வி எஸ். சுந்தரி பல்கலைக்கழகத் தர மதிப்பீட்டில் 18-வது இடம் பெற்றுள்ளார்.
2019 மார்ச் 12-ஆம் நாள் கல்லூரியின் நிதி உதவியுடன் மாநில அளவிலான கவிதை, நாடகம், சிறுகதை ஆக்கப் பயிலரங்கு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 148 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
FACULTY MEMBERS :
Dr.(Smt.) T.Dhanalakshmi
Designation : HOD
Qualification : M.A., M.Phil., Ph.D.,NET.,DGT
Research Area : SANGAM LITERATURE,MODERN LITERATURE
Email : dhanamkirthik@gmail.com
Aadhaar Number : 7131 5085 0926
View Profile : 
Reports :
| State Level Workshop Verse-Drama-Short Story-12.3.2019 |
 |
| Bharathiyar Birthday Celebration (22.12.2022) |
 |
| Bharathiyar Memorial Day(07.09.2022) |
 |
| Faculty Exchange Programme (27.10.2022) |
 |
| Guest Lecture (06.09.2022) |
 |
| Inter-department Exchange Programme (23.09.2022) |
 |
| National Youth Day (12.01.2023) |
 |
| Guest Lecture (07.10.2022) |
 |
| World Language Day (21.02.2023) |
 |
| World Poetry Day (21.03.2023) |
 |
| World Radio Day (13.02.2023) |
 |
| Book Release Ceremony(23.09.23) |
 |
| National Seminar(12.11.2023) |
 |
| Bharathiyar Vizha(11.12.2023) |
 |
| International Literacy Day-09.09.2024 |
 |
| Tamil Conference- 20.12.2024 |
 |
| National Conference -(30.09.2025) |
 |